Adsterra 2

Adsterra 3

பதிற் கடமையாற்றுவதற்கான நியமிப்புக்கள்

 



அத்தியாயம் - IX

பதிற் கடமையாற்றுவதற்கான நியமிப்புக்கள்

* பதிற் கடமையாற்றுவதற்கான நியமிப்பு செய்யும் அதிகாரம் நியமிப்பு செய்யும் அதிகாரிக்கு மாத்திரமே உள்ளது.130

* பின்வரும் சந்தர்ப்பங்களில் பதிற் கடமையாற்றுவதற்கான நியமிப்பு செய்ய முடியும் .131
1. நிரந்தர அரச உத்தியோகத்தர் ஒருவர் உரிய அங்கிகாரத்துடன் வராது  இருக்கையில் அந்தப் பதவியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் கடமைகளை  நிறைவேற்றல்.

2. அரச நிறுவனமொன்றில்  குறித்த பதவியணியில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நிரந்தர நியமிப்பு செய்யும் செய்யும் வரை அந்தப் பதவியின்  பொறுப்பினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் கடமைகளை  நிறைவேற்றல்.

* சேவை  பிரமாணக்குறிப்பு மற்றும்  ஆட்சேர்ப்பு திட்டத்தின் பிரகாரம் தகைமைகளை பூர்த்தி செய்த , பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட, அதே  பதவி/  அதன் உடன் கீழுள்ள பதவியில் சேவையாற்றுகின்ற ஒருவர் ஒருவர் மட்டுமே பதிற் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட முடியும்.132

* ஒரு பதவியின் கடமையை முழுநேரம்/ ஏற்கனவே வகிக்கின்ற பதவியின்  வேலைக்கு மேலதிகமாக நிறைவேற்றுவதற்காகவே இந்நியமனம் வழங்கப்படுகிறது.133

* பதிற் கடமை  நியமிப்பை  பெற்ற உத்தியோகத்தர் அவர்  நியமிக்கப்பட்டுள்ள ஒருவர்  பதவியின் வேதன  அளவுத் திட்டத்தை கோர முடியாது.134

பதவியொன்றின் கடமைகளை மேற்கொள்வதற்கான நியமிப்புக்கள்.

* 132 ஆம் பிரிவின்  பிரகாரம் சேவை  பிரமாணக்குறிப்பு மற்றும்  ஆட்சேர்ப்பு திட்டத்தின் பிரகாரம் தகைமைகளை பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்  எவரும் இல்லாத விடத்து , அதற்காக மிகப் பொருத்தமான அரச உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பு  செய்யலாம்.135

* ஏதேனும் பதிவிக்குரிய உரித்துடைய கொடுப்பனவுகள் மற்றும் மற்றும் சிறப்புரிமைகளை பதிற் பதிற்கடமையாற்றும் உத்தியோகத்தர் அனுபவிக்க முடியும்.136

* பதிற் கடமைக்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தரின் பதவி, தற்போது  வகிக்கும் பதவிக்கு  மேலேயுள்ள/ சம அந்தஸ்தில் உள்ள  பதவியாக இருத்தல் வேண்டும்.137


பதவியொன்றின் பதிற் கடமையாற்றுவதற்கான பொது நிபந்தனைகள்


* குறித்த  பதவிக்கு பதிற் பதிற்கமையாற்ற உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கும் போது சேவை  பிரமாணக்குறிப்பு மற்றும்  ஆட்சேர்ப்பு திட்டத்தின் பிரகாரம்  நியமிக்க வேண்டும்.138

* பதிற் கடமையாற்றுவதற்கு உச்சபட்சம் 1 வருட காலத்திற்கு நியமித்தல் வேண்டும். 1 வருடத்திற்கு  மேல் நீடிப்பு  செய்வது குறித்து நியமிப்பு  செய்யும் அதிகாரி  பரீசிலிக்க பரிசிலிக்க முடியும்.139

* பதிற் கடமையாற்ற உத்தியோகத்தர் ஒருவரை நியமித்துள்ளவிடத்து அதற்குரிய வசதிகளை  நிறுவன/ திணைக்களத் தலைவர் செய்து  கொடுக்க வேண்டும்.140

* பதிற் கடமையாற்றியஉத்தியோகத்தர் ஒருவருக்கு விசேட உரித்துடைமை / விசேட அனுகூலம் எதுவும்  வழங்கப்பட முடியாது.141



அத்தியாயம் - X 

வினைத்திறன்காண் தடை  தாண்டல்

* அரச உத்தியோகத்தர் ஒருவரின் சேவையை உறுதிப்படுத்துவதற்கு / பதவி உயர்வு வழங்குவதற்கு/ வேதனப் படிநிலைக்கு அப்பால் செல்வதற்கு சேவை  பிரமாணக்குறிப்பு மற்றும்  ஆட்சேர்ப்பு திட்டத்தின் பிரகாரம் வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் தேவைப்பாடுகளை  நிறைவு செய்தல் வேண்டும்.142

* சேவை பிரமாணக்குறிப்பு மற்றும்  ஆட்சேர்ப்பு திட்டத்தின் பிரகாரம் வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் பரீட்சை நடத்தப்படல் வேண்டும்.143

*சேவை பிரமாணக்குறிப்பு மற்றும்  ஆட்சேர்ப்பு திட்டத்தில் வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் பரீட்சையை எந்த அதிகாரி நடாத்த வேண்டும்  என குறிப்பிடபடாத விடத்து நியமிப்பு  செய்யும் அதிகாரி / நிறுவனத்தினால் நடாத்தல் வேண்டும்.144

* வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைந்த அரச உத்தியோகத்தருக்கு பின்னிணைப்பு 11  இன் படி கடிதமொன்றை வழங்குதல் வேண்டும்.145

* சேவையை உறுதிப்படுத்தல்/ பதவி உயர்வு வழங்குதல் / வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைதல் போன்றவற்றிற்கு உத்தியோகத்தர் ஒருவர் ஏற்புடைய  பரீட்சையில் சித்தியடைந்த தினமே ஆகும்.146


வினைத்திறன்காண் தடை  தாண்டல் பரீட்சையில் பரீட்சையில் சித்தியடையத் தாமதமாதல்.

* அரச உத்தியோகத்தர் உரிய தினத்தில் வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைய தவறும் பட்சத்தில் அவரது  வேதன ஏற்றத்தை பிற்போடல் வேண்டும்.149

* உத்தியோகத்தரின் விசேட  காரணத்தின் படி வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைய கால  நீடிப்பை அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்ககீகாரத்துடன் மாத்திரமே  வழங்க வேண்டும்.

* நீடிப்பு  வழங்கப்பட்ட காலப் பகுதிக்குள் வேதன  ஏற்றத்தை பெற்றுக்கொள்ள இடமளித்தல் வேண்டும்.

* நீடிப்பு  வழங்கப்பட்ட காலப் பகுதிக்குள் வினைத்திறன் காண்  தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைய தவறினால் வேதன  ஏற்றத்தினை பிற்போடுதல் வேண்டும்.


திணைக்கள பரீட்சைகள்

* அரசாங்க சேவை ஆணைக் குழுவின் அங்கீகாரத்துடன்  சேவை பிரமாணக்குறிப்பு மற்றும்  ஆட்சேர்ப்பு திட்டத்தின் பிரகாரம் திணைக்கள பரீட்சைகள் நடாத்தப்படல் வேண்டும்.

* திணைக்களப்  பரீட்சைக்கான பொறிமுறை கட்டமைப்பை திணைக்கள  தலைவர் வகுத்தல் வேண்டும்.

* திணைக்களப்  பரீட்சைக்கான இறுதித் திகதிக்கு  3 வாரங்களுக்கு முதல் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.



Comments

HTML