பொது சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபம் 2310/20 சுருக்க குறிப்புக்கள்

 

அத்தியாயம் - iii

நியமிப்பு

பின்வரும் நியமனங்களை செய்வதற்கு ஆணைக்குழுவுக்கு தத்துவம் உள்ளது.

- பதிலீட்டு,ஒப்பந்த, அமய,தற்காலிக, கடமை மேற்கொள்ளும், பதில் கடமை மற்றும் நிரந்தர பதவிக்கு நியமிக்க முடியும்.

- அரச உத்தியோகத்தரின் தற்போதுள்ள சேவை அந்தஸ்தில் மாற்றம்

- அரச சேவையில் உள்ள ஒருவரை அரச சேவையில் மற்றுமொரு பதவிக்கு நியமிக்க முடியும்.

- அரச சேவையில் குறைந்த பதவித் தரத்தில் உள்ள ஒருவரை உயர் பதவியொன்றுக்கு நியமிக்க முடியும்.

- அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரை அல்லது உரிய முறையில் பதவி விலகிய அரச உத்தியோகத்தர் ஒருவரை மீள் நியமிப்பு செய்தல்/ மீள சேவைக்கமர்த்தல்.


நியமிப்பு செய்ய முன்பு கவனிக்க வேண்டிய விடயங்கள் ( நியமனம் வழங்குவதற்கு ஏற்புடைய நிபந்தனைகள்)

- வெற்றிடம் ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும்.

- நிதி ஏற்பாடு இருத்தல் வேண்டும்.

- புதிய ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு அல்லது சேவை பிரமாணக்குறிப்புக்கு அமைய நியமனம் செய்யப்படல் வேண்டும்.

- குறித்த பதவிக்கான தேவை தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும்.

- நியமனம் செய்பவருக்கு அதற்கான அதிகாரம் இருத்தல் வேண்டும்.

* பதவி வெற்றிடம் இல்லாத சந்தர்ப்பங்கள்

- ஏதேனுமொரு பதவியில் உள்ள ஒருவர் முழுச் சம்பள லீவு/ சம்பளமற்ற லீவில் இருத்தல்

- தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருத்தல்

- பணித்தடை செய்யப்பட்டிருத்தல்

- ஓய்வுபெறுகைக்கு முன் லீவில் இருத்தல்

- எனினும் தேவைப்பாட்டின் அடிப்படையில் பதில் கடமைக்கு நியமிக்க முடியும்.


 🌟நியமிப்பு 

தொடர்ச்சி

 பதிலீட்டு  அல்லது  அமய நியமிப்பு  தவிர்ந்த அரச  சேவையில்  உள்ள  சகல  நியமிப்புக்களும் அந்தப்  பதவியின்  சேவைப் பிரமாணத்துக்கு / ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு அமைவாக செய்யப்படல் வேண்டும்.

_ நியமனங்களை முற்திகதி இடல்

ஆணைக்குழு தவிர வேறு எந்த நியமன அதிகார பீடமும்  முற்திகதியிட முடியாது.

முற்திகதி இடுவதற்கான நிபந்தனைகள்

     * முற்திகதியிட  திகதி உத்தேசிக்கப் படுமிடத்து  அத்திகதி முதல் நிரந்தரமாக வெற்றிடம் நிலவுதல்.

   *  ஆட்சேர்ப்பு  திட்டத்திற்கு அமைவாக பூரண தகைமைகளை நியமனம் பெறும் உத்தியோகத்தர் பெற்றிருத்தல்.

   * சேவைப் பிரமாணத்துக்கு / ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு அமைவாக நியமனம் மேற்கொள்ளப்பட்டிருத்தல்.

முற்திகதி இட முடியாத சந்தர்ப்பங்கள்

* முற்திகதியிடல் காரணமாக உரிய  உத்தியோகத்தருக்கு அவரோடு  நியமனம் பெற்ற ஒருவரை விட சேவைமூப்பு கிடைக்கப்பெறல்/ சேவை மூப்பில் ஏதேனும் மாற்றம் நிகழ்தல்.

* நேர்முகப் பரீட்சை மூலம் வழங்கப்பட்ட நியமனம் எனின் பரீட்சை / நேர்முகப் பரீட்சைக்கு முன்னரான ஒரு திகதிக்கு  முற்திகதியிட முடியாது.

* விண்ணப்பம்  கோரப்பட்ட  அறிவித்தலின் படி தகைமைகளை பரீட்சிக்கப்பட்ட திகதிக்கு முன்னரான ஒரு திகதிக்கு  முற்திகதியிட முடியாது.

* திறந்த  பிரிவின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருப்பின் முற்திகதியிட முடியாது.


அத்தியாயம் - V

அரச சேவையில் நியமிப்பு பெற தகைமை இல்லாதவர்கள்

 - இலங்கை பிரஜையாக இல்லாதிருத்தல்

 - இலங்கை அரசுக்கு எதிராக குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை வழங்கப்பட்டவர்.

 - வேறு குற்றவியல் நடவடிக்கைக்கு தண்டிக்கப்பட்டவர்.

 - கடன் தீர்க்க வகையற்றவர் என பிரகடனப் படுத்தப்பட்டவர்.

  - அரச சேவையில் உள்ள போது பதவி வெறிதாக்கப்பட்டவர்கள், பொதுத் திறமையின்மை காரணமாக ஓய்வு பெறுவிக்கப்பட்டவர்,பதவி நீக்கத்திற்கு பதிலாக ஓய்வு பெறுவிக்கப்பட்டவர், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

* எனினும் பதவி வெறிதாக்கப்பட்ட ஒருவரையும், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒருவரையும் பொதுச் சேவை ஆணைக்குழு இணைத்து கொள்ள முடியும்.


அத்தியாயம் - VI

நியமிப்புக்களை நெறிப்படுத்தும் நியதிகளும் நிபந்தனைகளும்

* அரச உத்தியோகத்தர்களின் கடமைகள்

- அரசியலமைப்பின் சட்டங்களை பாதுகாத்து ஒழுகுதல்

- தேசிய அபிவிருத்தி மற்றும் தேசிய ஒற்றுமையை விருத்தி செய்தல்

- நியமனம் பெற்ற பதவியில் மனச்சாட்சியுடன் பணியாற்றல்.

- பொதுச் சொத்துக்களை பேணிப் பாதுகாத்தல்.

- ஏனையவர்களின்  உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் மதிப்பளித்தல்.

- இயற்கை வளங்களை பாதுகாத்தல்.


* ஓர் அரச உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புத் திட்டம், சேவை பிரமாணக் குறிப்புக்கள் , தாபன  விதிக்கோவை, நிதிப் பிரமாணங்கள், அரச கட்டளைகள்,சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் திணைக்கள கட்டளைகள் என்பவற்றுக்கு அமைந்து ஒழுகுதல் வேண்டும்.

* நிரந்தர ஓய்வூதிய பதவிக்கு நியமிக்கப்படும் ஒருவர் ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்தல் செய்தல் வேண்டும்.

* அமய, தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் நியமனம் நியமனம் பெற்றவர்கள் அரசாங்க சேவை சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்தல் செய்தல் வேண்டும்.

* ஓர் அரச உத்தியோகத்தர் இலங்கையின் எப்பகுதியிலும் கடமையாற்ற கட்டுப்பட்டுள்ளார்.

* ஓர் அரச உத்தியோகத்தர் இலங்கையின் எப்பகுதியிலும் கடமையாற்றுவதற்கு உடல்,உள நீதியாக தகுதியுடையவர் என்பதை அரசமருத்துவர் மூலம்  சான்றுப்படுத்தல் அவசியம் ஆகும்.

- நிரந்தரப் பதவிக்கு நிரந்தரமாக/ தற்காலிகமாக இணைப்பு செய்யப்படும் ஒருவர் பொது 169 பூரணப்படுத்தி அருகிலுள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் மருத்துபரிசோதனை மேற்கொண்டு நிறுவனத்தலைவர் ஊடாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத் தல் வேண்டும்.

- மருத்துவ அறிக்கையின் பிரகாரம் தகுதியுடையவர்  எனின் உரிய திணைக்கள தலைவருக்கு அனுப்புதல் அனுப்புதல் வேண்டும்

- அவ்வாறு தகுதி  இல்லாவிடில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் சமர்ப்பித்தல் வேண்டும்.

- மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கும் வரை புதிதாக நியமனம் செய்யப்பட்ட உத்தியோகத்தருக்கு சம்பளம் வழங்க முடியாது.

- மருத்துவ அறிக்கையின் பிரகாரம் தகுதியற்றவர்  எனின் அவருடைய நியமனத்தை இரத்து இரத்து செய்தல் வேண்டும்.

* ஓர் அரச உத்தியோகத்தர்  அரசியலமைப்பின் 4ம் மற்றும் 7ம் அட்டவணைகளின் பிரகாரம் சத்தியப்பிரமாணம் செய்தல் வேண்டும்.

* ஓர் அரச உத்தியோகத்தர், அரச அரச மொழிக் கொள்கைக்கு அமைவாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய  மொழிகளில்  தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

* ஓர் அரச உத்தியோகத்தர் பதவி பதவி விலகுவதாயின் நியமிப்பு செய்த அதிகாரிக்கு எழுத்து  மூலம் ஒரு பஞ்சாங்க மாதத்திற்கு முன் அறிவிக்க வேண்டும்.

* பதிலீட்டு/ அமய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஒருவரின்  சேவையை நியமிப்பு செய்த அதிகாரிக்கு எதுவித முன்னறிவித்தல் அன்றி முடிவுறுத்த முடியும்.

* போலித் தகவல் / ஆவணங்களை வழங்கி நியமனம் பெற்றிருப்பின், அது தொடர்பாக குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் உடனடியாக பதவி வெற்றும்  வெறிதுமானதாக நடவடிக்கை  எடுக்கப்படும்.

அத்தியாயம் - VII

ஆட்சேர்ப்புக்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய தலைமுறைகள் 

* ஆட்சேர்ப்பு திட்டம் அல்லது சேவை பிரமாணக் குறிப்புக்கமைய அங்கிகரிக்கப்பட்ட பதவி   வெற்றிடங்களை தாமதம்  இன்றி நிரப்புதல்  அவசியம் ஆகும்.

* விஷேட சந்தர்ப்பங்களில் ஆட்சேர்ப்பு திட்டம் அல்லது சேவை பிரமாணக் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு புறம்பாக , ஆட்சேர்ப்பு செய்ய  வேண்டிய தேவை ஏற்படுமிடத்து வேண்டுகோள் ஒன்றை அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு  சமர்ப்பித்தல் வேண்டும்.

* ஆட்சேர்ப்பு திட்டம் அல்லது சேவை பிரமாணக் குறிப்புக்கமைய ஏற்புடைய  பரீட்சைகள்/தொழில் சார்  தேர்வுகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகள் நடத்துவதற்கு ஒழுங்குகளை நியமிப்பு செய்யும் அதிகாரி செய்தல் வேண்டும்.

முன்கூட்டிய செயற்பாடுகள்

* பதவி  வெற்றிடம் ஒன்று  ஏற்படுமிடத்து அதனை நிரப்பப்படுவதற்கு திணைக்களத் தலைவரினால் சிபாரிசு செய்யப்பட்டு அறிக்கையிடல் வேண்டும்.

*  சேவை பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை கோருவதற்கு விளம்பரம் ஒன்றையும், நேர்முகப் பரீட்சை நடத்துவதாயின் அதன் அதன் புள்ளி   வழங்கும் திட்டத்தையும் விளம்பரப்படுத்த நடவடிக்கை  எடுத்தல் வேண்டும்.

* சேவை பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்தில்  விளம்பர முறை   குறிப்பிடப்படாதவிடத்து, நியமன  அதிகாரி  விடயத்திற்கேற்ப உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உள்ளக சுற்றறிக்கை மூலமும், வெளிவாரி எனில் எனில் அரச வர்த்தமானி வர்த்தமானி/  இணையத்தளம் / பிரபல பத்திரிகை மூலமும் விளம்பரம்  செய்வதற்கு ஒழுங்குகளை செய்தல் வேண்டும்.

பரீட்சைகள் மற்றும் தேர்வுகளை நடாத்துதல்

* விண்ணப்பங்களை கோரும் அறிவித்தலை தயாரிப்பது  நியமிப்பு செய்யும் அதிகாரியின் பொறுப்பு ஆகும்.

* விண்ணப்பங்களை கோரும் அறிவித்தலில் ஆட்சேர்ப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை, விண்ணப்பதாரிகளால் தகைமை பூர்த்தி செய்திருக்க வேண்டிய திகதி என்பன குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.

*   விண்ணப்ப முடிவுத் திகதி  நீடிக்கப்படும் பட்சத்தில்  விண்ணப்பதாரிகளால் தகைமை பூர்த்தி செய்திருக்க வேண்டிய திகதியை மாற்ற முடியாது.

*சேவை பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்தில் , ஆட்சேர்ப்புக்குக்காக தொழில் சார் /செயல்முறை பரீட்சை நடத்துவதற்கு ஏற்பாடு இருப்பின் ஆரம்பத்தில்  எழுத்து பரீட்சை நடத்தல் நடத்தல் வேண்டும்.

* சேவை பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்தில், புள்ளிகள் வழங்கப்படும் நேர்முகப்பரீட்சைக்கு  நடத்த ஏற்பாடு இருப்பின் , எழுத்து மூல பரீட்சையில் பெற்ற  திறமை ஒழுங்குப்படி புள்ளிகள் குறிப்பிடாது அகர  வரிசையில் பெயர் பட்டியல் தயாரித்து நியமிப்பு செய்யும் அதிகாரிக்கு பரீட்சை நடாத்திய அதிகாரி அனுப்புதல் வேண்டும்.

நேர்முகப் பரீட்சைகளை நடாத்துதல்

* சேவை பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்திற்கமைய நேர்முக பரீட்சை சபைகளை நியமித்தல் வேண்டும்.

*  நேர்முக பரீட்சை சபை

    - அரச  சேவையாளர் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள். ஆகக் குறைந்தது  3 
உறுப்பினர்கள்
    - வெற்றிடம் கோரப்பட்டுள்ள திணைக்களம்/ அமைச்சிற்கு  வெளியில் இருந்து திணைக்களம்/ அமைச்சில் உள்ளவராக  இருத்தல்.
     - ஆண்,பெண்  இருபாலாரும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
      - உரை பெயர்ப்பாளர் ஒருவர் இருத்தல்.
     
* நேர்முக பரீட்சை சபைக்கு  தேவையான ஆவணங்கள் 
   - சேவை பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேர்ப்பு திட்டம்
   - விண்ணப்பங்கள் கோரப்பட்ட விளம்பரம்
   - விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை, பெயர்கள், மற்றும் தகைமைகள்
    - நேர்முகப்பரீட்சை அட்டவணை

*  நேர்முக பரீட்சையில் பிரசநேர்முக பரீட்சை சபையின் அனைத்து  உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருத்தல்.

* பென்சில் பாவனை செய்ய செய்ய முடியாது.காபன் பேனை/ அழிக்க முடியாத  பேனை உபயோகித்தல் வேண்டும்.

* நேர்முகப் பரீட்சையில் பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் திறமை  திறமை முன்னுரிமையில் புள்ளி  பட்டியல் தயாரித்தல்  வேண்டும்.


* நேர்முக பரீட்சை சபைக்கு எழுத்து  மூலப் பரீட்சையில்  பெற்ற  புள்ளிகள் தெரியப்படுத்தலாகாது.


இதன் தொடர்ச்சி... வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

* குறிப்பு - இந்தப் பதிவுகளில் ஏதேனும் பிழைகள் அல்லது மாற்றம் செய்ய செய்ய வேண்டுமாயின் கருத்துக்களை பதிவிடவும்..

   * உங்கள் அன்பான  கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். உங்கள் ஊக்குவிப்பு மேலும் பதிவுகளை  இடுவதற்கு எனக்கு உதவியாக இருக்கும்.  



Comments