கவிச்சாரல்
💖💖💖 காதல் புத்தகம் 💖💗💖
காதல் புத்தகம் ஒன்றை
கண்டெடுத்தேன் அன்பே!
கண்ணீரால் செதுக்கிய அழகிய
பக்கங்கள் பல......
முகவுரையை திருப்பினேன் அதிலே
உன்முகம் கண்டேன்!
முதல் நாள் உனைக்
கண்டதில் இருந்து ........
பழகிய அழகிய தருணங்கள்
என் கண்முன்னே தோன்றி மறைகின்றன..
நெருங்கி பேசிய வார்த்தைகள்
தொனிக்கின்றன என் காதினில்!
ஒவ்வொரு பக்கங்களும்
ஒவ்வொரு காவியம் தான்!
தொலைந்து போன என் நெஞ்சத்தை
தேடுகின்றேன் அதில்......
தொலைபேசி உரையாடல்கள்
குறுஞ்செய்திகள் நீ என்னுடையவன்
என்று தான் சொல்கின்றன......
கண்ணீரில் நனைகின்றன
என் கண்களும்.......
நினைவில் தொலைத்த உன்னை
நிஜத்தில் தேடுகின்றேன்.......
காதல் கொண்ட நினைவுகள்
காற்றாய் தான் பறந்து போயின.....
காதல் புத்தகத்தில் - என்
காதலும் வெறும் எழுத்துக்கள் தானோ!
உன் தோள் சாயத்தான்
உன்னைத் தேடினேன்....
பக்கங்கள் ஒவ்வொன்றும்
உன் நினைவலைகள்......
ஆனால் எல்லாம் கானல்நீராகின....
முடிவுரையில் தான் பார்த்தேன்
முடிவுறுத்தப்பட்ட நம் காதலை...!
காதல் புத்தகத்தில் என்
காதலும் புதைக்கப்பட்டதே!
மறைக்கப்பட்ட காதல்
உன்னுடன் பழக தொடங்கிய
அந்த நாளின் தானே - உன் மேல்
காதலில் விழுந்தேன்........
கண்களோடு கண்கள் பார்த்ததுமில்லை..
கைகளோடு கைகள் கோர்த்ததுமில்லை....
நினைவோடு மலர்ந்தது என் காதல்
உணர்வோடு கலந்தது என் காதல்
பேசிய வார்த்தைகளும் குறைவு
பார்வையில் மட்டும் உன்னுடன்
பேசிக் கொண்டேன் உனக்கே தெரியாமல்....
குறுஞ்செய்தி வரும் போதெல்லாம்
உன்னுடைய குறுஞ்செய்தியாய் இருக்காதா
என்றோர் ஏக்கம் என்னுள்ளே!
உன்னைப் பார்க்கையில் எனக்குள் ஓர்
மாற்றம் தான் ஏனோ!
பேசத் துடிக்கிறது மனது
மறுக்கிறது என் உதடுகள்.....
என் காதலை உன்னிடம் சொல்வதற்கு
தூது ஒன்றை தந்திடு...
கொட்டித் தீர்த்து விடுகிறேன் - என்
ஒட்டுமொத்த அன்பையும் உன்னிடம்....
சொல்லாக் காதலை உனக்கு
எழுத்தின் கவியினால் சொல்கிறேன்..
மறைக்கப்பட்ட என் காதல்
ஒரு தலைக்காதல் !
💗கனவுகள்💗
உன் நினைவுகளில் வாழ்கின்றேன்
கனவுகளில் தான் உன்
முகம் காண்கின்றேன்...
நிஜங்களில் நீ இல்லையே!
தூக்கமின்றி இரவுகளும் நீளுகின்றதே!
காதல் செய்ததால் வந்த
தண்டனை தான் இதுவோ!
உன்னை மறக்க போரிட்டது மனது
மறந்தால் தான் என்ன என்கிறேன் மனதிடம்
உயிரில் கலந்த உன்னை
உதறித் தான் எறியலாமா?
மெளனங்கள் மட்டும் பேச வார்த்தையின்றி
ஊசலாடுகின்றன......
கற்களில் செதுக்கிய சிலையாய் என்
காதல் வாழுதே!
நீர் மேல் எழுத்தாய் உன்
காதலும் அழிந்ததே!
கனவுகளில் நித்தம் வருவாய் என
இரவுகளுக்காய் காத்திருக்கிறேன்.....
பேசிட நினைக்கும் போதெல்லாம் - உன்
புகைப்படம் பார்க்கின்றேன்...
நேரில் உனை காணவே
நாழிகை எதிர்பார்க்கின்றேன்...
தீரா காதல் கொண்டேன் உன் மேல்....
நிழல் போல தான் உன் காதலும்
மறைந்தே போகின்றது.......
தேய் பிறையாய் தெரிகிறாய்...
தேடியும் கிடைக்காமல்
தொலைந்தே போகிறாய்......
உன்னை பிடித்த இதயத்தை விட்டு
உனக்கு பிடித்த இதயத்தை
தேடிச் சென்று விட்டாய்....
என் மேல் வந்த காதல்
கசத்து விட்டதோ? அன்பே!
கனவுகளில் மட்டும் தான் உன்
கரம் பிடித்து நடக்கிறேன்...
நிஜத்தினில் நீ யாரோ நான் யாரோ?
தனிமையில் தான் என் கால்களும்
நடை போடுகின்றன....
ஒரு காலத்தில் என் உலகம்
நீயாக இருந்தாய்,
என் கனவுகளின் வண்ணம்
உன் சிரிப்பாக இருந்தது....
ஒவ்வொரு மூச்சிலும்
உன் பெயர் ஒலித்தது....
ஆனால் இன்று அந்த ஒலி
அமைதியாகி விட்டது.......
கண்ணீர்களில் நனைகின்றது
என் தலையணையும் ......
நீயின்றி துடிக்க மறுக்கிறது
என் இதயம்......
உன்னை நினையாத நாளில்லை...
உன்னை மறந்தால் நானில்லை....
உன் பெயரை தினம்
எழுதிப் பார்க்கின்றேன்....
காகிதத்திலாவது சேர்ந்து
வாழமாட்டேனா என்று.....
கனவுகள் மெய்படுமா? - இல்லை
கானல் நீராகி விடுமா?


.jpeg)

Comments
Post a Comment