இலங்கை மற்றும் உலகளாவிய போக்குகளின் பொது அறிவு
நோபல் பரிசு 2025
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் அறக்கட்டளையால் இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது சுவீடன் நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது மருத்துவம்,இயற்பியல்,வேதியியல், பொருளாதாரம்,அமைதி போன்ற துறைகளுக்கு வழங்கப்படுகின்றது.
நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் ஆகியவை வழங்கப்படவுள்ளன.
அந்த வகையில்,
👉மருத்துவத்திற்கான நோபல் பரிசு - 6 அக்டோபர்
👉இயற்பியலுக்கான நோபல் பரிசு - 7 அக்டோபர்
👉வேதியியலுக்கான நோபல் பரிசு - 8 அக்டோபர்
👉இலக்கியத்துக்கான நோபல் பரிசு - 9 அக்டோபர்
👉அமைதிக் நோபல் பரிசு - 10 அக்டோபர்
👉பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - 13 அக்டோபர்
அதன் அடிப்படையில்,
💥 இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
1. ஜான் கிளார்க்,
2. மைக்கேல் டெவோரெட்
3. ஜான் மார்டினிஸ்
மின்சார சர்க்யூட்களில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்தமைக்காக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
💥மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
1. மேரி இ பிரன்கோவ் - அமெரிக்கா
2. ஃப்ரெட் ராம்ஸ்டெல் - அமெரிக்கா
3. ஷிமோன் சகாகுச்சி - ஜப்பான்
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
💥இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1. எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் - ஹங்கேரி
பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலைத்திறனை உறுதிப்படுத்திய தொலைநோக்கு பார்வைக்காக இது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியமைக்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
1.அண்மையில் காலமான இந்தியாவின் 14வது பிரதமரின் பெயர் என்ன?
*அடல் பிஹாரி வாஜ்பாய்
* பதவி காலம் - 1996 (குறுகிய காலப்பகுதி), 1999.10.13
2. அண்மையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 10 வது உறுப்பினராக இணைந்து கொண்ட ஆசிய நாடு எது?
*இந்தோனேசியா 2025 இல் இணைந்து கொண்ட 10 வது நாடாகும்.
*தலைமையகம் - சீனா ( ஷாங்காய்)
*தலைமை பொறுப்பு - பிரேசில்
*பிரிக்ஸ் அமைப்பு - 2009 இல் பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
*2024 இல் இதனோடு ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன இணைந்து கொண்டன.
3.அண்மையில் அனுஸ்டிக்கப்பட்ட உலக தபால் தினம் எத்தனையாவது?
*151 வது தினம் , ஒக்டோபர் - 9
*1874 இல் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் 1969 இல் ஒக் 9 ம் திகதி உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது.
4. வேதியலுக்கான நோபல் பரிசு – 2025 இம் முறை பெற்றுக் கொண்டவர்கள்?
*சுசுகுமு கிடகாவா: ஜப்பான்
*ரிச்சர்ட் ராப்சன்: ஆஸ்திரேலியா
*ஓமர் எம். யாகி: அமெரிக்கா
உலோக - ஆர்கனிக் கட்டமைப்புக்கள் துறையில் அளித்த பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.
5. அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்தை மாற்றுவதற்குத் உத்தேசித்து வரும் ஆசிய நாடு யாது?
இலங்கை
6. இலங்கையரான டாக்டர் பி.டி.நந்ததேவா ஐ.நாவின் எந்த கிளை அமைப்பிற்கு சமீபத்தில்(2025) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்?
*ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு உறுப்பினர் - 2025
7. கடந்த வருடம் (2024) எந்த நாடு நேட்டோவில் 32 வது உறுப்பினராக இணைந்து கொண்டது?
*சுவீடன் - 32 வது நாடாக இணைந்து கொண்டது.
*2024.03.07
*நடுநிலை வகித்து வந்த சுவீடன் உக்ரைன் போர் நிமித்தம் நேட்டோவில் சேர்ந்தது.
8. தோற்றம், பரிணாமம் மற்றும் காலத்தின் தன்மை என்பவற்றினை கூறும் “A Brief History of Time ” எனும் பிரபல்யமான விஞ்ஞான நூலினை எழுதியவர் யார்?
ஸ்டீபன் ஹாக்கிங்
9. ஐக்கிய நாடுகள் சபையின் AUSSOM திட்டத்தின் பயனாளி நாடு எது?
*எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
*AUSTRO UN SOMALIA partnership
10. இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பின் போது பயன்படுத்தப்படும் முறைமையின் பெயர் என்ன?
*கணனி உதவி தனிநபர் நேர்காணல்- CAPI
*இம்முறை, தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் அச்சிடப்பட்ட ஆவணங்களுக்கு மேலாக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
*சகல கணக்கெடுப்புப் பணியாளர்களும் இந்த முறையைப் பயன்படுத்தி கணக்கெடுப்பில் பங்கேற்போரிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பார்கள்.
*கணக்கெடுப்புடன் தொடர்பான புவியியல் சார்ந்த தகவல்களைப் பெறுவதற்கும் இந்த முறை உதவுகிறது.
11. உலகளாவிய தேயிலை ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கும் நாடு எது?
சீனா - 1ம் இடம்
கென்யா - 2ம் இடம்
இந்தியா - 3ம் இடம்
12. ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த ஆண்டு 2025 எவ்வாண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?
* சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டு
* சர்வதேச கூட்டுறவு ஆண்டு
* ஐ.நா வின் அமைதி காக்கும் மாநாட்டின் ஆண்டு
12. சமீபத்தில் (2025) யுனெஸ்கோவினால் இலங்கையின் எந்த வரலாற்று ஆவணங்கள் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டது?
* திரிபாஷா செல்லிப்பியா, பனதுரா வாதயா
13. Fortaleza பிரகடனம் எதனோடு தொடர்புடையது?
* 2014 இல் பிரேஷிலில் நடைபெற்ற 6 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட முக்கிய ஆவணமாகும்.
* பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு செயல் திட்டம்.
14. ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டத்தினை நிறைவேற்றிய ஆசிய நாடு எது?
* இந்தியா
15. அண்மையில் கிண்ணஸ் உலக சாதனை படைத்த இந்தியாவின் மிகப் பெரிய சமய நிகழ்வு எது?
* அதிக எண்ணிக்கையில் நபர்கள் உடுக்கை வாசிக்கும் பிரிவு
* 1500 பேர்
* 2024.08.05
* மத்திய பிரதேசம் உஜ்ஜைன் மஹாகாளாஸ்வர் கோயில்
15. தெற்காசியாவின் நிதித் தொழில்நுட்ப (FINTECH)நகரம் எது?
* கொழும்பு துறைமுக நகரம்
*காசா - இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் எகிப்து நாட்டு ஜனாதிபதி அப்தேல் பட்டா எல் சிசி தலைமையில் எகிப்து நாட்டில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
- 20 அம்சங்கள் கொண்டது.
- ஐ.நா தலைவர்(குட்டரேஸ்), 20 நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
* பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
ஜோயல் மோகிர், & பீட்டர் ஹோவிட் - அமெரிக்கா
பிலிப் அகியோன் - பிரித்தானியா
- அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக வழங்கப்படுகின்றது.
* எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 11வது மெகா ஸ்டார்ஷிப் ராக்கட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் வைத்து ஏவப்பட்டது.
* மடகஸ்காரில் Gen-Z போராட்டம். இளம் தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்நாட்டு ஜனாதிபதிஆண்ட்ரி ராஜோலினா தப்பியோடியுள்ளார்.
- ஜீன் ஆண்ட்ரே நிட்ரேமஞ்சரி இடைக்கால செனட் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- புதிய ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரையில் தற்காலிகமாக இவர் இருப்பார்.
* உலகின் முதன்முதலில் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் ஸ்ரான்வேக் நகரில் உள்ள SNN Power நிறுவனம் இதனை நிறுவியுள்ளது.
- 1.87 மெகாவாட் திறன் கொண்ட இந்த மிதக்கும் சோலார் திட்டம், ஆண்டுக்கு சுமார் 2 GWh மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
- Jais gravel pit எனும் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் புதிய பரிணாமத்தினை ஏற்படுத்தியுள்ளது.
*ஐரோப்பிய ஒன்றியம் புதிய ESS முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
* 2026ம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வரும் வகையில் தென்கொரியா K Star விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
-இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள், குறிப்பாக AI, பயோடெக்னாலஜி மற்றும் மேம்பட்ட பொறியியல் துறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உலக சுற்றுலா தினம் September -27
- 2025 August வரையான காலப்பகுதியில் 1.57 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
* ஆசிய கோப்பை T20 இல் அதிக அதிக ரன்கள் சேர்த்த சாதனையாளர்
பதும் நிஸங்க - 434 ரன்கள் - 12 innings
* ஆசிய கோப்பை கிரிக்கட் வரலாற்றில் அதிக முறை இறுதி போட்டிக்கு சென்ற சாதனை
இலங்கை - 12 முறை
* அண்மையில் 26 சமூக ஊடகங்களை தடை செய்த நாடு
நேபாளம்
* உலகில் உயரமான பாலம் திறந்து வைத்த நாடு
சீனா - Huajiang Grand Canyon - 625m உயரம்
* பெண்களுக்கான ரக்பி போட்டியில் வெற்றி பெற்ற நாடு
இங்கிலாந்து
சாதியா ஹபேயா- சிறந்த வீராங்கனை
இங்கிலாந்தில் நடைபெற்றது.
* இலங்கையின் மிக வயதான நபர்
போலன்ட் ஹகுரு மெனியேல் 110 வயது
காலி - கரந்தெனியா
1915.06.04
* ABU உச்சி மாநாடு 2025 இல் எங்கு நடைபெற உள்ளது
இலங்கை - November
9 வது மாநாடு
காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் தடுப்பு
* 7 தீவுகளின் நகரம் - மும்பை
* புக்கர் விருது பெற்ற இலங்கையர்கள்
மைக்கல் ஒன்டார் ஜே
செஹான் கருணாதிலக
* உலகின் முதலாவது பணக்கார நடிகர்
சாருகான் - 12,490 கோடி
* உலகின் 500 பில்லியன் நிகர சொத்து மதிப்பை கொண்ட முதல் நபர்
எலான் மஸ்க் - டெஸ்லா நிறுவனர்
* உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வானில் இருந்து பல இடங்களை காணும் வாய்ப்பு வழங்கிய தேசிய திட்டம்
தெரன சிக்னல் ஆகாயத்தில் ஓர் பயணம்
250 மாணவர்கள்
ஆகாயத்தில் இருந்து எம் நாடு - கருப்பொருள்
* உலக சிறுவர் தினத்தின் கருப்பொருள்
ஒரு தலைமுறையை உருவாக்கிய ஒரு தலைமுறையை பாதுகாப்போம்.
💥அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு இரு உயரிய விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் காசா இஸ்ரேல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டினால் இரு உயரிய விருதுகள் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
*இஸ்ரேல் நாட்டின் "presidential of Honour" எகிப்து நாட்டின் "Order of Nile" என்ற விருதும் வழங்கப்பட உள்ளது.
* கட்டாரில் இரண்டு பில்லியன் டாலர் செலவில் 12 கிலோமீட்டர் பாலம் அமைக்கப்பட உள்ளது.
* ஆசியாவின் மிகப்பெரிய தரவு தளம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ளது.
* கிட்டத்தட்ட 16,000 ட்ரோன்களின் வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் சீனா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.




.webp)

.jpeg)
Comments
Post a Comment