நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்தல் மற்றும் நியமனக் கடிதம்
நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்தல் மற்றும் நியமனக் கடிதம்
* எழுத்துப்பரீட்சை, நேர்முகப்பரீட்சையில் விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொண்ட மொத்தப் புள்ளிகளின் திறமை ஒழுங்கு அடிப்படையில் மட்டும் செய்யப்படல்.
* மேற்படி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பின்னிணைப்பு 03, 04 பிரகாரம் முறையான நியமிப்பு கடிதம் வழங்கப்படல் வேண்டும்.
* விண்ணப்பம் கோரப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட தினத்தன்று நிலவிய வெற்றிடங்களை விட அதிகமாக நியமிப்பு செய்ய ஆகாது.
* கடைசி வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பதாரிகள் சமமான புள்ளிகளை பெற்றிருப்பின் ஆணைக் குழுவிற்கு அறிக்கை செய்து அறிவுறுத்தல்களை பெற்று கொள்ளல் வேண்டும்.
நியமிப்பிற்கு பின்னர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
* அரச பதவியொன்றுக்கு நியமனம் பெற்ற ஒரு உத்தியோகத்தர் பின்னிணைப்பு 05 இல் உள்ள மாதிரியின் பிரகாரம் நியமிப்பு செய்யும் அதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.
* நியமனம் பெறும் உரிய உத்தியோகத்தரின் ஆள் அடையாளத்தினை நிறுவனத்தலைவர் உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும்.
* நியமனம் பெறும் உத்தியோகத்தர் ஒரு மாத காலத்தினுள் நிறுவனத் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது கட்டாயமாகும். அவ்வாறு இல்லாவிடில் அவரது நியமனம் ரத்தாவதற்கு காரணமாக காரணம்.
* நியமனம் பெறும் உத்தியோகத்தர், கடமை பொறுப்பேற்கும் முதல் நாளில் பின்னிணைப்பு 06 இன் பிரகாரம் கடிதம் ஒன்றை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
* கடமை பொறுப்பேற்கும் போது பின்வரும் ஆவணங்களை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
1.தேசிய அடையாள அடையாள அட்டையின் சான்றுபடுத்திய பிரதி
2. பிறப்புச் சான்றிதழ்
3. கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களின் பிரதிகள் ( True copy)
4. திருமணம் ஆனவராயின், திருமணச் சான்றிதழ் , பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ் பிரதிகள்
5. பொது 160 - சேவை உடன்படிக்கை
6. பொது 261 - சொத்துக்களில் பிரகடனம்
7. ஏற்புடைய சொத்துக்கள், பொறுப்புக்களின் விபரம்
8. முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி.
* நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திகதியில் கடமை பொறுப்பு ஏற்கா விடில் அந் நியமனம் ரத்தாகும். (ஏற்றுக்கொள்ளத்தக்க காரணத்தை எழுத்து மூலம் அறிவிக்கலாம்)
* நியமனம் பெறும் உத்தியோகத்தருக்கு கீழ்வரும் ஆவணங்களை பெயர் வழி கோப்பு திறந்து பேணி வைத்தல் வேண்டும்.
1. பெயர் வழி கோப்புக்காக வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரதி.
2. வரலாற்றுத்தாள்
3. விதவைகள், அநாதைகள் ஓய்வுதியத் திட்ட பிரகடனத்தின் பிரதி
4. மருத்துவ அறிக்கை 169
5. சத்தியப் பிரமாணத்தின் மூலப் பிரதி
* நிறுவனத் தலைவர் குறித்த நியமனம் பெறும் உத்தியோகத்தரை தமது தமது அலுவலக ஒரு கிளையில் இணைப்பு செய்து கடமைப்பட்டியல் வழங்கல் வேண்டும்.
* நிறுவனத் தலைவர் குறித்த நியமனம் பெறும் உத்தியோகத்தர் கடமை பொறுப்பேற்
றதை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிவித்தல் வேண்டும்.
* தற்காலிக/ நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒருவர் மருத்துவ அறிக்கையை நியமனம் வழங்கப்பட்டு 3 மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
* புதிதாக நியமிக்கப்பட்ட ஒருவர் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் தகுதியற்றவர் என உறுதிபடுத்தப்படும் பட்சத்தில் அவரது நியமிப்பை முடிவுறுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
அத்தியாயம் - VIII
தகுதி கூர் நிலைக் காலம் மற்றும் நியமனத்தை உறுதிப்படுத்தல்
* அரச சேவையில் நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒருவர் 03 ஆண்டுகள் தகுதிகூர் நிலைக்கு உட்படவேண்டும்.
* இந்த காலப்பதியில் சிறந்த வரவு, நன்னடத்தை ,வினைத் திறமை என்பன மூலமும் சேவை புரிதல் வேண்டும்.
* இதன் மூலம் அந்த உத்தியோகத்தரின் கடமைகள் கடமைகள் பரிசீலிக்கப்படுவதோடு அவரது கடமைகள் தொடர்பாக அனுபவத்தை பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
* தகுதிகூர் நிலை காலப்பகுதியில் உத்தியோகத்தர் ஒருவர் தவறுகள்/ குறைகள் அறியப்படும் பட்சத்தில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு அதனை திருத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
*தகுதிகூர் நிலை காலப்பகுதியில் உத்தியோகத்தர் ஒருவரின் நடத்தை , சுபாவம் தொடர்ந்து சேவையில் வைத்திருப்பதற்கு திருப்திபடாத சந்தர்ப்பத்தில் நிறுவனத் தலைவர் அவரது நியமனத்தை முடிவுறுத்த முடியும்.
- பின்னிணைப்பு 07 இல் உள்ளவாறு நியமன முடிவுறுத்தற் கடிதம் அமைதல் வேண்டும்.
* தகுதிகூர் நிலை காலப்பகுதியில், 1ம், 2ம் ஆண்டின் அறிக்கைகள் பின்னிணைப்பு 08 இல் தயாரித்தல் வேண்டும். 3ம் ஆண்டு அறிக்கை (இறுதி மீளாய்வு அறிக்கை) ஆகக் குறைந்தது 3 மாதத்திற்கு முன்பு நியமிப்பு செய்யும் அதிகாரிக்குப் சமர்ப்பித்தல் வேண்டும்.நியமிப்பு செய்யும் அதிகாரி 3 அறிக்கைகளையும் பரிசீலித்து தகுதிகூர் காலப்பகுதியை உறுதிப்படுத்தல்/ நீடித்தல் தொடர்பாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
* சேவையை உறுதிப்படுத்த உத்தியோகத்தர் தகுதியற்றவர் எனில் நியமிப்பு செய்யும் அதிகாரி தகுதிகூர் காலப் பகுதியினை நீடிப்பு செய்யலாம். அதன்படி ஆகக் குறைந்தது 3 வருடங்கள் நீடித்து வேதன ஏற்றத்தை பிற் போடல் வேண்டும்.
* தகுதி கூர் காலப்பகுதியில் ஒருவரால் புரியப்பட்ட ஒழுங்கீனம் ஒன்றிற்கான விசாரணை அப்பகுதியில் முடிவடையாதவிடத்து ஒழுங்கீனத் தன்மையை கருத்திற் கொண்டு நியமனத்தை முடிவுறுத்த முடியும்/தகுதிகூர் காலப் பகுதியினை நீடிப்பு செய்யலாம்.
* தகுதிகூர் காலப் பகுதியினை நீடிப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பின்னிணைப்பு 08 இல் மீளாய்வு அறிக்கை தயாரித்தல் வேண்டும்.
ஒரு வருட தகுதி கூர்நிலைக் காலம்
* அரச சேவையில் நிரந்தரமாக்கப்பட்ட ஒருவர் வேறொரு நிரந்தர சேவைக்கு நியமிக்கப்படும் போது 1 வருடம் தகுதி கூர் நிலைக் காலத்திற்கு உட்பட வேண்டும்.
* புதிய பதவியின் நிபந்தனைகளை நிறைவேற்ற 1 வருட காலப்பகுதி போதாத விடத்து 3 வருடத்தை விட கூடாத தகுதி கூர் நிலைக் காலத்தினை விதிக்க முடியும்.
* அரச சேவையில் நிரந்தரமாக்கப்பட்ட ஒருவர் வேறொரு நிரந்தர சேவைக்கு நியமிக்கப்பட்டு 1 வருடம் தகுதி கூர் நிலைக் காலப் பகுதிக்கு உட்படும் போது பின்னிணைப்பு 08 இல் மீளாய்வு அறிக்கை தயாரித்தல் வேண்டும்.
* மீளாய்வு அறிக்கையின் படி சேவையை உறுதிப்படுத்த உத்தியோகத்தர் தகுதியற்றவர் எனில் நியமிப்பு செய்யும் அதிகாரி தகுதிகூர் காலப் பகுதியினை நீடிப்பு செய்யலாம். அதன்படி ஆகக் குறைந்தது 3 வருடங்கள் நீடித்து வேதன ஏற்றத்தை பிற் போடல் வேண்டும்.
* தகுதி கூர் காலப்பகுதியில் ஒருவரால் புரியப்பட்ட ஒழுங்கீனம் ஒன்றிற்கான விசாரணை அப்பகுதியில் முடிவடையாதவிடத்து ஒழுங்கீனத் தன்மையை கருத்திற் கொண்டு தகுதிகூர் காலப் பகுதியினை நீடிப்பு செய்யலாம்.
பதவியில் நிரந்தரமாக்கல்
* தகுதி கூர்நிலை காலப் பகுதியில் நன்னடத்தை, வினைத்திறமை என்பவை திருப்தி படும் பட்சத்தில் அவரின் அவரின் நியமிப்பு திகதியில் இருந்து செயல்படும் வண்ணம் அவரது நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
முன்னர் வகித்த பதவிக்கு மீள அனுப்புதல்
* அதன் அடிப்படையில், அரச சேவையில் நிரந்தரமாக்கப்பட்ட ஒருவர் வேறொரு நிரந்தர சேவைக்கு நியமிக்கப்படும் போது தகுதி கூர் நிலைக் காலத்திற்கு உட்பட்டு இறுதியில் பதவி முடிவுறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவரை அவர் வகித்த பதவிக்கு திருப்ப அனுப்புதல்.
* மீள சேவைக்கு அனுப்பும் கடிதம் பின்னிணைப்பு 09 இன் படி தயாரித்தல் வேண்டும்.
* தகுதிகூர் காலப்பகுதி முடிவடைந்ததுடன் அவரது நியமனத்தை உறுதிப்படுத்தல்/ நீடித்தல் / முடிவுறுத்தல் தொடர்பாக நியமன அதிகாரி நவடிக்கை எடுத்தல் வேண்டும்.
* நியமனம் உறுதிப்பத்துவதற்கான தேவைப்பாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருப்பின் நியமன அதிகாரி அதனை பின்னிணைப்பு 10 இன் படி அமைத்த கடிதம் மூலம் வழங்க வேண்டும்.
* உத்தியோகத்தரின் தனிப்பட்ட காரணங்கள் அல்லாமல் , தகுதிகூர் நிலை காலப்பகுதியில் தகைமைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் அவரது
தகுதிகூர் நிலை காலப்பகுதியை நீடிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். எனினும் அவரது சேவை மூப்பிற்கும், வேதன ஆண்டு ஏற்றத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் அவரது முதல் நியமனத் திகதியில் நியமனத்தை உறுதிப்படுத்தல் வேண்டும்.
* உத்தியோகத்தரின் தனிப்பட்ட காரணங்களினால் , தகுதிகூர் நிலை காலப்பகுதியில் தகைமைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் அவரது நியமனத்தை முடிவுறுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
உங்கள் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
.jpeg)
.jpeg)

Comments
Post a Comment